முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில்  மதிமுக சார்பில் பேச்சுப் போட்டி

திண்டுக்கல்லில் மதிமுக சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசளிக்கப்பட்டது.

Updated On : 24 ஜூலை 2018, 1:00 am IST
பகிர்:

திண்டுக்கல்லில் மதிமுக சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில், பெரியார், அண்ணா என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கிடையிலான இந்தப் போட்டிக்கு, மதிமுக மாவட்டச் செயலர் என். செல்வராகவன் தலைமை வகித்தார். அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கி. ராமசாமி முன்னிலை வகித்தார். 
இப்போட்டியில், 10 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், மாணவி ச. ஜெபிலா இன்சென்சியா ராய் (புனித அந்தோணியார் கல்லூரி) முதலிடமும், மாணவர் இரா. விஸ்வா (ஜிடிஎன் கல்லூரி) 2ஆவது இடமும், மாணவி எம். சண்முக பிரியா(சக்தி மகளிர் கல்லூரி) 3ஆம் இடமும் பிடித்தனர்.
முதல் பரிசுக்கு ரூ. 6ஆயிரத்தை மாவட்டப் பொருளாளர் பி.கே. சுதர்சன், 2ஆம் பரிசாக ரூ.4 ஆயிரத்தை மாவட்ட துணைச் செயலர் பெ. பழனிச்சாமி, 3ஆம் பரிசாக ரூ.2 ஆயிரத்தை திண்டுக்கல் ஒன்றியச் செயலர் ஆர். மோகன் ஆகியோரும் வழங்கினர். மேலும், இவர்கள் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அதைத் தொடர்ந்து நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு ரூ. 1 லட்சம்,  2ஆம் பரிசாக ரூ. 50 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.25 ஆயிரம்  வழங்கப்பட உள்ளது. 
போட்டிக்கான ஏற்பாடுகளை, மதிமுக மாவட்ட மாணவரணி  அமைப்பாளர் எஸ். மணிவண்ணன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments