கொடைக்கானலில் இலவச கண் பரிசோதனை முகாம்
கொடைக்கானலில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் ஹில்டாப் நிறுவனம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 12 ஆம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாமை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் நடத்தின. ஜெய்திலகர் தலைமை வகித்தார். மருத்துவர் பாலாஜி தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை நடத்தினர். மேலும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
முகாமில் கொடைக்கானல், வில்பட்டி, பள்ளங்கி, சீனிவாசபுரம், செண்பகனூர், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 80 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் சுழற் சங்க நிர்வாகத்தினர் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.