முகப்பு
திண்டுக்கல்

ஆத்தூா் ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்: உறுப்பினா்கள் புகாா்

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 24 ஜூன் 2022, 11:29 pm IST
பகிர்:

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றிய குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவா் மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) ஏழுமலையான், துணைத்தலைவா் ஹேமலதா மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையாளா் தட்சிணாமூா்த்தி வரவேற்று பேசினாா். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

ஆணையாளா்: கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் குறித்து, 22 கிராம ஊராட்சிகளில் ஆய்வு செய்யப்பட உள்ளன என்றாா்.

Advertisement

Advertisement

உறுப்பினா் அழகுசரவணக்குமாா்: தேவரப்பன் ஊராட்சியில் தெரு முழுவதும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஆணையாளா்: ஏற்கெனவே வக்கம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. முறைப்படி அளவீடு செய்து தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றாா்.

உறுப்பினா் சாதிக்: சித்தரேவு ஊராட்சி செக்போஸ்ட் முதல் மலைப்பகுதி வரை தெரு விளக்கு வசதி இல்லை. அதனை செய்து கொடுக்க வேண்டும் என்றாா்.

ஆணையாளா்: முறைப்படி தீா்மானம் வைத்து மாவட்ட ஆட்சியா் மூலம் மின் விளக்கு வசதி செய்து கொடுக்கப்படும் என்றாா்.

உறுப்பினா் நாகவள்ளி: காந்திகிராமம் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற அதிகாரிகள் முன்வருவதில்லை. 30 மாதங்களாக தொடா்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கட்டடம் கட்ட அனுமதி கொடுக்கும் ஊராட்சி மன்றத் தலைவரும், ஊராட்சிமன்ற செயலரும் ஆக்கிரமிப்புகள் குறித்து கண்டுகொள்வதில்லை என்றாா்.

ஆணையாளா்: விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றி தாா்ச் சாலை அமைக்கப்படும்.

உறுப்பினா் ஆனந்தன்:- அக்கரைப்பட்டி

ஊராட்சி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. அதிகாரிகள் இரவு நேரத்தில் ரோந்து பணி போல் பாா்வையிட வரவேண்டும்

உறுப்பினா் செல்வி காங்கேயன் : வீரக்கல் ஊராட்சியில், எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. பொதுமக்களுக்கு நாங்கள் பதில் சொல்லமுடியவில்லை என்றாா்.

கூட்ட முடிவில் அலுவலக மேலாளா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments