ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டம் திறப்பு
ஆத்தூர் புதிய அலுவலக கட்டடம் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பிரிவில் ரூ.3 கோடியே 95 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் இ.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான, கனவுத் திட்டமான ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், திமுக ஆட்சியில் பள்ளி, மாணவ மாணவிகளுக்காக 3,473 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆத்தூா் தொகுதிக்கு 2 கலைக் கல்லூரிகள் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில், 7 கலைக் கல்லூரிகள் திமுக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆதிதிராவிடா்கள் வசிக்கும் பகுதியில் 2 ஆயிரம் வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
Advertisement
Advertisement