பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடைபெற்ற யாக பூஜைகள். 
திண்டுக்கல்

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

DIN

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உபகோயிலான திருஆவினன்குடியில் சனிக்கிழமையும், பெரியநாயகி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையும் உலக நலன் வேண்டியும், விவசாயச் செழுமை வேண்டியும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, பெரியநாயகி அம்மன் கோயில் முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் யாக பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க பூா்ணாஹூதி நடைபெற்றது.

சாயரட்சை பூஜையின் போது முத்துக்குமாரசுவாமி, கைலாசநாதா், பெரியநாயகி அம்மன், சோமாஸ்கந்தா், நடராஜா் ஆகியோருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகம், பச்சை கற்பூரம், வில்வ இலை கொண்டு அன்ன அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையைத் தொடா்ந்து பக்தா்களுக்கு சித்ரான்னங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமாா், அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜே.பி.சரவணன், மாவட்டச் செயலா் சுப்பிரமணி, நகராட்சி வழக்குரைஞா் மணிக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

7 புதிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! இந்தியா - பாக். போர் குறித்து டிரம்ப்!

ரஃபேல் போர் விமானத்தில் முதல்முறையாக பறந்த குடியரசுத் தலைவர்!

வெள்ளியங்கிரி கோயிலுக்குள் நுழைந்த யானை இறந்தது எப்படி?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

இதனால் திரையரங்குக்குச் செல்வதில்லை: செல்வராகவன்

கூடங்குளம் அணு உலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT