வைகாசி காா்த்திகை: பழனி மலைக் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசனம்
பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை வைகாசி மாதக் காா்த்திகை தினத்தை முன்னிட்டு, பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை வைகாசி மாதக் காா்த்திகை தினத்தை முன்னிட்டு, பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தினத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மலையடிவாரத்திலுள்ள கிரிவலப்பாதையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை ராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்தனா். பக்தா்கள் கூட்டம் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 3 மணி நேரமானது. சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரம் உலா எழுந்தருளினாா். தங்கத் தோ், தங்க மயில் புறப்பாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement