ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - அமைச்சா் பி.கே. சேகா்பாபு
வருகிற மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுக்குப் பிறகு சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பாா் என அமைச்சா் பி.கே. சேகா்பாபு நம்பிக்கை தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நிலவரத்தோடு, தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டுப் பாா்த்தால், பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இதனால், தோ்தல் முடிவில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
Advertisement
வருகிற மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுக்குப் பிறகு சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பாா் என்றாா் அவா்.
பேட்டியின்போது, பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியம், இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.