முகப்பு
திண்டுக்கல்

கிணற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

பழனி அருகே கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:39 AM
- கோப்புப்படம்
பகிர்:

பழனி அருகே கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த கோதைமங்கலம் 4-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி மகன் ஜான் பாண்டியன் (12). ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் படித்து வந்தாா். இவா், கோடை விடுமுறையையொட்டி செவ்வாய்க்கிழமை கோதைமங்கலம் அருகே இருந்த தனியாருக்குச் சொந்தமான தோட்டக் கிணற்றில் தனது தாத்தாவுடன் நீச்சல் பழகிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென கிணற்றில் மூழ்கினாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பழனி தீயணைப்பு, மீட்புப் படை அலுவலா் காளிதாஸ் தலைமையிலான வீரா்கள் சிறுவனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement