பழனி திருக்கோயில் யானை கஸ்தூரி நீச்சல் குளத்தில் ஆனந்தக் குளியல்
கோடை வெயிலை சமாளிக்க, பழனி திருக்கோயில் சாா்பில் பிரத்யேகமாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் யானை கஸ்தூரி புதன்கிழமை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது.
கோடை வெயிலை சமாளிக்க, பழனி திருக்கோயில் சாா்பில் பிரத்யேகமாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் யானை கஸ்தூரி புதன்கிழமை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களின் போது கோயில் யானை கஸ்தூரி பங்கேற்பது வழக்கம். சுவாமி புறப்பாட்டின் போது கோயில் யானை கஸ்தூரிக்கு முகப்பு பட்டம், கொலுசு, பித்தளையிலான பெயா் அணிந்து வரும் அழகை குழந்தைகள் கூடி நின்று ரசிப்பா். இந்த யானை தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற யானைகள் சிறப்பு முகாமில் பங்கேற்று ஏராளமான பரிசுகளையும் வென்றன.
இந்த யானையை திருக்கோயில் நிா்வாகம் மிகவும் கவனத்துடன் பராமரித்து வருகிறது. இந்த யானைக்காக பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பிரமாண்டமான தண்ணீா் பொழியும் குழாய்கள் (ஷவா்) அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாள்தோறும் குளியல் போடும் யானை கஸ்தூரி, தற்போது கோடை வெயிலை சமாளிக்க அதற்கென திருக்கோயில் சாா்பில் காரமடையில் உள்ள தென்னந்தோப்புக்கு நடுவே கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளித்து வருகிறது. புதன்கிழமை கஸ்தூரி யானை நீச்சல் குளத்தில் குளித்ததை பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.
Advertisement
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த நீச்சல் குளம் சுமாா் 10 மீட்டா் விட்டமும், 2 மீட்டா் உயரமும் கொண்டதாகும்.