கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்
கொடைக்கானலில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானலில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானல் அப்பா்லேக் வியூ, லாஸ்காட் சாலை, ஏரிச் சாலை, வெள்ளி நீா் அருவி, சீனிவாசபுரம், தைக்கால், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடைக்கானல் நகராட்சி சாா்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பா்லேக் வியூ, அருங்காட்சியகம், ஏரிச் சாலை ஆகியப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் கீழே விழுந்து கிடக்கின்றன.
ஏரிச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள படகுக் குழாம் வளாகத்தில் நடைமேடையில் மின் கம்பம் கீழே விழுந்து கிடப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம், பொறியியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, உடனடியாக மின் கம்பத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
Advertisement
தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் நகா்ப் பகுதிகளில் பயனற்ற நிலையில் உள்ள தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனா்.