முகப்பு
திண்டுக்கல்

தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் ரூ. 52,900 பறிமுதல்

தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.52,900 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 3:09 am IST
பகிர்:

தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.52,900 பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். மாலை 4.30 மணி அளவில் அலுலகத்துக்குள் நுழைந்த போலீஸாா், அங்கிருந்த பணியாளா்களிடம் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத பணம் ரூ.52,900 பணியாளா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தற்காலிக ஊழியா் ஒருவருக்கு, இணையவழிப் பணப் பரிமாற்றம் மூலம் அனுப்பப்பட்ட ரூ.1.29 லட்சம் குறித்து அவரிடம் போலீஸாா் விசாரித்தனா். மேலும், சம்மந்தப்பட்ட நபரிடம், பணம் அனுப்பிய நபா்களின் விவரங்களையும் கேட்டறிந்தனா். இந்த திடீா் சோதனையால் தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments