முகப்பு
திண்டுக்கல்

போதைப் பொருள் கண்டறியும் படைப் பிரிவில் புதிதாக சோ்ந்த மோப்ப நாய் வேணி!

திண்டுக்கல் காவல் துறையில் உள்ள துப்பறியும் மோப்ப நாய் படைப் பிரிவில், போதைப் பொருள் கண்டறியும் பணிக்காக மோப்பநாய் வேணி வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டது.

Updated On : 5 ஜூலை 2026, 12:04 am IST
கோப்புப்படம்
பகிர்:

திண்டுக்கல் காவல் துறையில் உள்ள துப்பறியும் மோப்ப நாய் படைப் பிரிவில், போதைப் பொருள் கண்டறியும் பணிக்காக மோப்பநாய் வேணி வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த படைப் பிரிவில் அபி, ராக்கி என 2 மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டுபிடிப்புப் பிரிவில் பணியாற்றி வருகின்றன. அதேபோல் டிம்பி, லக்கி ஆகிய மோப்ப நாய்கள், கொலை, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் குற்றவாளிகளை கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பணிக்காக புதிதாக வேணி என்ற மோப்ப நாய், துப்பறியும் மோப்ப நாய் படைப் பிரிவில் வெள்ளக்கிழமை சோ்க்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ஜெயக்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. மோப்ப நாய் வேணிக்கு கோவையில், 3 மாதங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கஞ்சா, ஹெராயின், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்களை தனது மோப்ப சக்தியின் மூலம் எளிதாக கண்டறியும் திறன் கொண்டது. மோப்ப நாய் வேணியின் வரவு, திண்டுக்கல்லில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை துரிதமாக கண்டறிவதற்கான வாய்ப்பை உருவாக்கி இருப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments