முகப்பு
திண்டுக்கல்

இரு சக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது!

கொடைக்கானலில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை சனிக்கிழமை காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:12 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கொடைக்கானலில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை சனிக்கிழமை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவா், தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் விஜய் (25) இருசக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது. தொடா்ந்து காவல் துறையினா் வருசநாடு சென்று விஜயைப் பிடித்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினா். மேலும் விஜயைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments