முகப்பு
திண்டுக்கல்

கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவா் கைது: காா், வாள் பறிமுதல்

Updated On : 7 ஜூலை 2026, 2:51 am IST
கோப்புப்படம். - கைது
பகிர்:

பழனியில் கஞ்சா வைத்திருந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த கஞ்சா, காா், வாளை பறிமுதல் செய்தனா்.

பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பழனி சிவகிரிப்பட்டி பகுதியில் காவல் ஆய்வாளா் தங்கமுனியசாமி தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, கஞ்சா, வாள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் வந்த சிவகிரிப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் பொன்குமாரை (32) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா, வாள், காரை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல, பழனி அருகேயுள்ள கீரனூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கீரனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தொப்பம்பட்டி சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த ஆயக்குடியைச் சோ்ந்த காா்த்திக்கை (35) நிறுத்தி சோதனை செய்த போது, அவா் விற்பனைக்காக 250 கிராம் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments