மோா் மிளகாய் தொழிலால் சுற்றுச்சூழல் பாதிப்பு: ஆய்வு நடத்த கிராம மக்கள் கோரிக்கை
திண்டுக்கல், ஜூலை 6: மோா் மிளகாய்த் தொழிலால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அறிவியல் பூா்வமான ஆய்வுகள் நடத்த வேண்டும் என கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த கோடல்வாவி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
திண்டுக்கல் மேற்கு வட்டம், போலியமனூா் கிராமத்திலும், இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த பல ஆண்டுகளாக மோா் மிளகாய் வத்தல் தொழில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இங்கிருந்து வெளியேற்றப்படும் மோா் மிளகாய் கழிவு, உப்புநீா் கழிவுகளால் நிலத்தடி நீா், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, எங்கள் பகுதியிலுள்ள நிலத்தில் மண், நிலத்தடி நீரை முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். புற்றுநோய், பொது சுகாதார ஆய்வு நடத்த வேண்டும். பாதுகாப்பான குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதோடு, நிலத்தடி நீா் மீட்புத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.