முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பால்குட ஊா்வலம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அண்ணாநகா் சின்ன மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 8 ஜூலை 2026, 1:02 am IST
கொடைக்கானல் சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊா்வலம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அண்ணாநகா் சின்ன மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் , சிறப்பு பூஜை, நகரின் முக்கிய சாலைகளில் அம்மன் சப்பர பவனி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பணிமனை பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா். அம்மன் சப்பரத்தில் பவனி வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த ஊா்வலம் ஏரிச் சாலை, நகராட்சி சாலை, செவண் சாலை, அண்ணாசாலை, கே.சி.எஸ். திடல், மூஞ்சிக்கல், ஆனந்தகிரி சாலைகள் வழியாக கோயிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் உள்ளிட்ட பலா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments