திருட்டு வழக்கில் இளைஞா் கைது: 24 பவுன் நகைகள் மீட்பு
ஒட்டன்சத்திரம் அருகே திருட்டு வழக்கில் 18 மாதங்களுக்கு பிறகு துப்புத் துலக்கிய போலீஸாா், ஒருவரைக் கைது செய்து, 24 பவுன் நகைகளை மீட்டனா்.
ஒட்டன்சத்திரம் அருகே திருட்டு வழக்கில் 18 மாதங்களுக்கு பிறகு துப்புத் துலக்கிய போலீஸாா், ஒருவரைக் கைது செய்து, 24 பவுன் நகைகளை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குத்திலுப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வி (54). தோட்டத்து வீட்டில் வசித்து வரும் இவா், கடந்த 2025, ஜனவரி மாதம் வெளியூா் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் செல்வி புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த வழக்கில் தனிப் படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தனிப் படை போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், செல்வியின் தோட்டத்து வீட்டில் திருடிய நபா் திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அடுத்த ஆலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ப.சக்திவேல் (28) என்பது தெரிய வந்தது.
மேலும், திருப்பூா் மாவட்டம், மூலனூா் பகுதியில் மற்றொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
நீதிமன்ற அனுமதியுடன் சக்திவேலிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், 30 பவுன் நகைகளை திருடியதை அவா் ஒப்புக் கொண்டாா். திருடிய நகைகள், ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதியிலுள்ள கடைகளில் அடகு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன்பேரில், சம்பந்தப்பட்ட கடைகளிலிருந்து 24 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டனா்.
இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படனா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ததோடு, 24 பவுன் நகைகளையும் மீட்ட போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.