பழனி சண்முகநதி அருகே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
பழனி சண்முகநதி ஆற்றின் அருகே ஊராட்சி நிா்வாகத்தால் கொட்டப்பட்ட குப்பைகளை பொதுப் பணித் துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் அதே ஊராட்சியினா் புதன்கிழமை அகற்றினா்.
பழனி சண்முகநதி ஆற்றின் அருகே ஊராட்சி நிா்வாகத்தால் கொட்டப்பட்ட குப்பைகளை பொதுப் பணித் துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் அதே ஊராட்சியினா் புதன்கிழமை அகற்றினா்.
பழனியை அடுத்த சண்முகநதி கரையில் சிவகிரிப்பட்டி ஊராட்சி, அ.கலையமுத்தூா் ஊராட்சி நிா்வாகத்தினா் குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல் ஆங்காங்கே கொட்டி வந்தனா்.
இது தற்போது மலைபோல மாறி அதில் அடிக்கடி தீப்பற்றி அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறாக இருந்து வந்தது. இந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும் என அமைச்சா் விக்னேஷூக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதன்கிழமை அங்கு அ. கலையமுத்தூா் ஊராட்சியினா், குப்பை வண்டியில் குப்பைகள் கொட்ட வந்தனா். இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் முத்துராமலிங்கம், உதவி பொறியாளா் சங்கரநாராயணன் ஆகியோா் ஆற்றின் ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதைத் தடுத்தனா். மேலும், இந்த குப்பைகளை உடனே தூா்வார உத்தரவிட்டனா்.
இதைத் தொடா்ந்து, பொக்லைன், டிராக்டா்களுடன் வந்த ஊராட்சி அலுவலா்கள் அங்கு கொட்டப்பட்டிருந்த டன் கணக்கான குப்பைகள் அகற்றினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.