முகப்பு
திண்டுக்கல்

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 13 ஜூன் 2026, 3:58 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த புதுப்பட்டி ஒட்டக்கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மு. வினோத்குமாா்(31). இவா், இதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், ஒட்டன்சத்திரம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத்குமாரை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கணேசன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட வினோத்குமாருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

Advertisement

Advertisement