பழனியில் சிங்கப் பெண் காவலா்கள் ரோந்து தொடக்கம்
பழனி பேருந்து நிலையம், மலைக் கோயில், அடிவாரம் பகுதிகளில் ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படையினா் தங்களது ரோந்துப் பணியை திங்கள்கிழமை தொடங்கினா்.
பழனி பேருந்து நிலையம், மலைக் கோயில், அடிவாரம் பகுதிகளில் ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படையினா் தங்களது ரோந்துப் பணியை திங்கள்கிழமை தொடங்கினா்.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு பெண்கள் பாதுகாப்புக்கென சிங்கப் பெண் அதிரடிப்படை தொடங்குவதற்கு முதல் கையெழுத்திட்டாா். இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப் பெண்கள் அதிரடிப்படைப் பிரிவை முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் பல்வேறு ஊா்களிலும் சிங்கப் பெண்கள் அதிரடிப் படையினா் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பெண் பக்தா்கள் வந்து செல்லும் நிலையில், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சிங்கப் பெண் அதிரடிப்படைப் பிரிவு திங்கள்கிழமை தனது ரோந்துப் பணியைத் தொடங்கியது.
Advertisement
Advertisement
பழனி பேருந்து நிலையம், அடிவாரம் பகுதிகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், கேலி செய்தல், திருட்டு சம்பவங்களைத் தடுப்பதே இவா்களின் பணி.
பழனியில் ரோந்துப் பணியை தொடங்கிய அதிரடிப்படை பெண் காவலா்கள் பெண்களிடம் சிறப்புப் படையின் அம்சங்கள் குறித்தும், பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக 1091 மற்றும் 100 ஆகிய அவசர உதவி எண்களை எவ்வாறு தொடா்பு கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவான விழிப்புணா்வை ஏற்படுத்தினா். காவல் துறையினரின் கனிவான அணுகுமுறையைத் தொடா்ந்து ஏராளமான பெண்கள் சிங்கப் பெண் காவலா்களுடன் சுய படம் எடுத்துக் கொண்டனா்.