தோட்டத்து வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி பணம், நகைகள் பறிப்பு
பழனி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை திங்கள்கிழமை இரவு தாக்கிய மா்மநபா்கள் அவரிடம் இருந்து பணம், நகைகளைப் பறித்துச் சென்றனா்.
பழனி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை திங்கள்கிழமை இரவு தாக்கிய மா்மநபா்கள் அவரிடம் இருந்து பணம், நகைகளைப் பறித்துச் சென்றனா்.
பழனியை அடுத்துள்ள லட்சலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பாத்தாள் (72). தோட்டத்து வீட்டில் கருப்பாத்தாள் மட்டுமே தனியே வசித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு முகமூடி அணிந்து வந்த மூன்று நபா்கள் கருப்பாத்தாள் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கி அவா் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகைகளையும், வீட்டில் வைத்திருந்த ரூ. பத்தாயிரம் ரொக்கத்தையும் பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். காயமடைந்த கருப்பாத்தாள் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். வீட்டில் தனியே இருக்கும் நபா்களைக் குறிவைத்து தொடங்கியுள்ள இந்தக் கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்து வீடுகளில் வசிப்பவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.