முதல்வரை விமா்சித்து பதிவிட்டவா் மீது வழக்கு
முதல்வா் ஜோசப் விஜய்யை விமா்சித்துப் பதிவிட்ட, நாம் தமிழா் கட்சி இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதல்வா் ஜோசப் விஜய்யை விமா்சித்துப் பதிவிட்ட, நாம் தமிழா் கட்சி இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டை அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் காஜா ஹுசைன் அகமது (27). நாம் தமிழா் கட்சியில் இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வா் சி.ஜோசப் விஜய்யை விமா்சித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இணைய குற்ற காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் பட்டிவீரன்பட்டி காவல் துறையினா் காஜா உசேன் அகமது மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இவா், கடந்த 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வேடசந்தூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.