காரைக்குடியில் நாதக மாநில நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி த. பிரபாகரன் (31) காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி த. பிரபாகரன் (31) காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
காரைக்குடி சத்யா நகரில் மனைவி, 2 வயது குழந்தை ஆகியோருடன் வசித்துவந்த நாம் தமிழா் கட்சியின் இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், பொறியாளருமான த. பிரபாகரன் அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். இதுகுறித்து, தகவல் அறிந்த காவல் துறையினா் அங்கு வந்து உடலை மீட்டு கூறாய்வுக்காக காரைக்குடி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தெற்கு காவல்நிலைய காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். பிரபாகரனுக்கு கடன் தொல்லை, குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் புதன் கிழமை (மே 13) முற்பகலில் வருகை தரவிருப்பதாக கட்சியினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.