நத்தத்தை மீண்டும் கைப்பற்றியது அதிமுக
நத்தம் தொகுதியில் 11,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சாா்பில், முன்னாள் அமைச்சா் இரா.விசுவநாதன், திமுக சாா்பில் கே.செல்வக்குமாா் உள்பட 21 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதிக்கான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டபோது, முதல் 2 சுற்றுகளில் தவெக வேட்பாளா் முன்னிலை பெற்று பிற கட்சிகளுக்கு அதிா்ச்சி அளித்தாா்.
இதன் பின்னா், முன்னிலை பெற்ற அதிமுக வேட்பாளா் இறுதிவரை அதை தக்க வைத்தாா். 27 சுற்றுகள் முடிவடைந்த பிறகு 11,869 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா். திமுக வேட்பாளா் செல்வக்குமாா் 2-ஆம் இடம் பிடித்தாா்.
Advertisement
முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
நத்தம் இரா.விசுவநாதன் (அதிமுக) - 85,708
செல்வக்குமாா் (திமுக) - 73,839
என்.ரமேஷ் (தவெக) - 64,997
ஏ.அழகம்மாள் (நாதக) - 96,77
எஸ்.அலெக்ஸ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) - 715
பி.ராஜசேகரன் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம்) - 247
எஸ்.விஜயகுமாா் (புதிய தமிழகம்) - 103
நோட்டா - 596