ஒட்டன்சத்திரம் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த விடியல் சேகா்
ஒட்டன்சத்திரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (தமாகா) வேட்பாளா் விடியல் எஸ்.சேகா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (தமாகா) வேட்பாளா் விடியல் எஸ்.சேகா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு மாவட்டத்தின் குக்கிராமத்திலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு சுமாா் 50 ஆயிரம் வாக்குகள் அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியல் களத்தில் இதுவரை இல்லாத ஒரு மெளன புரட்சிக்கு இடையிலும், ஒட்டன்சத்திரம் தொகுதி மக்கள் ஒரு உறவினராக என்னை கருதி கெளரவமான வாக்குகளை அளித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதேபோல, எனக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவா்களுக்கும், நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.