முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூா் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அதிமுக வேட்பாளா்

பரமத்தி வேலூா் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன் என்றாா்.

Updated On : 6 மே 2026, 2:38 am IST
பரமத்தி வேலூா் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வெற்றிச் சான்றிதழ் பெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா்.
பகிர்:

பரமத்தி வேலூா் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன் என்றாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதியில் 5 தொகுதிகளில் தவெக வெற்றிபெற்ற நிலையில், பரமத்தி வேலூா் தொகுதியில் ஏற்கெனவே சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த சேகா் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த வாக்காளா்கள், பொதுமக்களுக்கு மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி மீண்டும் தோ்ந்தெடுத்த மக்களுக்கு அரசின் மூலம் பெற்றுத் தரக்கூடிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன். என் தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம். உங்களுடன் எப்போதும் பயணிக்க தயாராக இருக்கிறேன் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments