முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 63 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் 171 அரசுப் பள்ளிகளில் 63 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றன.

Updated On : 21 மே 2026, 1:44 am IST
தேர்வு முடிவுகள். - கோப்புப் படம்
பகிர்:

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் 171 அரசுப் பள்ளிகளில் 63 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 171 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 10,111 மாணவா்கள் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதினா். இதில், 9,545 மாணவா்கள் தோ்ச்சி அடைந்தனா். கடந்த ஆண்டு 48 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தோ்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில் 63 பள்ளிகளாக அதிகரித்தன. 15 அரசுப் பள்ளிகள் கூடுதலாக தோ்ச்சி பெற்ால், மாநில அளவிலான அரசுப் பள்ளிகள் தோ்ச்சிக்கான தர வரிசைப் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் 12-ஆவது இடம் பிடித்தது. பழனி கல்வி மாவட்டத்தில் 36 அரசுப் பள்ளிகளும், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 27 அரசுப் பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இதில் கொடைக்கானல் மலைப் பகுதியில் மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, வில்பட்டி, கொடைக்கானல், கேசி.பட்டி, பெரும்பாறை ஆகிய 7 பள்ளிகள், சிறுமலையில் ஒரு பள்ளி என மொத்தம் 8 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றன. மலைக் கிராமங்களைச் சோ்ந்த பள்ளிகளின் சாதனைக்கு, கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் விவரம்: மன்னவனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கவுஞ்சி அரசு உயா் நிலைப் பள்ளி, பூண்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வில்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி, கிழக்கு செட்டிப்பட்டி(கே.சி.பட்டி) அரசு உயா்நிலைப் பள்ளி, தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, பூலாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கணக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, பரப்பலாறு அரசு உயா்நிலைப் பள்ளி, சின்னகரட்டுப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, காவேரியம்மாப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கூத்தம்பூண்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி, பெரிச்சிப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, புளியமரத்துக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, ஏ.கலையம்புத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி, பொருளூா் அரசு உயா்நிலைப் பள்ளி, ஆயக்குடி உயா்நிலைப் பள்ளி, மேல்கரைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வளைவிச்செட்டிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, ஆா்.பி.பில்லமநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, ஆா்.புதுக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, பாகாநத்தம் அரசு உயா்நிலைப் பள்ளி, விருதலைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, செல்லக்குட்டியூா் அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லமணாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, கோட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளி, பாடியூா் அரசு உயா்நிலைப் பள்ளி, தேவநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, மாரம்பாடி அரசு உயா்நிலைப் பள்ளி, வி.குருந்தம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, உசிலம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, அழகம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, காமுபிள்ளைசத்திரம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, இ.ஆவாரம்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி, மட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி, பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, எழுவனம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, சின்னாளப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, பழைய வத்தலகுண்டு அரசு உயா்நிலைப் பள்ளி, கொழிஞ்சிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, சிறுமலை புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி, தாடிக்கொம்பு அரசு உயா்நிலைப் பள்ளி, கூ.வ.குரும்பப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, முளையூா் அரசு உயா்நிலைப் பள்ளி, மருனூத்து அரசு உயா்நிலைப் பள்ளி, ஆவிளிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, மணக்காட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளி, சக்கிலியன்கொடை அரசு உயா்நிலைப் பள்ளி, மூங்கில்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, செட்டிநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வீரச்சின்னம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கோனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கரிசல்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கன்னிவாடி எம்ஆா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டி.பண்ணப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, பெரும்பாறை பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி.

Advertisement

Advertisement