முகப்பு
மதுரை

விரைவு ரயில்கள் பயண நேரத்தில் மாற்றம்

இணைப்பு ரயில்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மதுரை வழியே செல்லும் 2 விரைவு ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:53 am IST
பகிர்:

இணைப்பு ரயில்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மதுரை வழியே செல்லும் 2 விரைவு ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
  மதுரை - டேராடூன்/ சண்டிகர் (வாரம் இருமுறை) விரைவு ரயில்  (எண்.12687) மதுரையில் இருந்து புதன்கிழமை இரவு 11.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வியாழக்கிழமை (ஏப். 5) காலை 11.30 மணிக்கு புறப்படும். இதேபோல, மதுரை வழியாகச் செல்லும் கன்னியாகுமாரி-நிஜாமுதீன் விரைவு ரயில் (எண்.12641)  புதன்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வியாழக்கிழமை (ஏப். 5) மாலை 4 மணிக்கு புறப்படும்.  இணைப்பு ரயில்கள் புறப்படுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments