அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் சேதம்: திருமங்கலம் கோயில் செயல் அலுவலர் போலீஸில் புகார்
திருமங்கலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் செயல் அலுவலர் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.
திருமங்கலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் செயல் அலுவலர் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.
திருமங்கலம் காட்டு பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள 1.10 ஏக்கர் இடத்தில் கடலை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை சிலர் ஞாயிற்றுக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டனர். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனராம். இதையடுத்து செயல் அலுவலர் சக்கரையம்மாள் திருமங்கலம் நகர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் அமைப்பு ஒன்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இந்த இடம் கோயில் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் சுற்றுச்சுவரை தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியது தொடர்பாக கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.