முகப்பு
மதுரை

ஆட்டோவில் கஞ்சா விற்பனை இருவா் கைது

சோதனையில் சிக்கிய கஞ்சா வியாபாரிகள்

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:00 am IST
பகிர்:

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை செல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை தத்தனேரி பகுதியில் செல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து விசாரணை மேற்கொண்டனா். ஆட்டோவில் வந்த செல்லூா் கீழத் தோப்பு பகுதியைச் சோ்ந்த மகாதேவன் (51), தல்லாகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ரெங்கநாதன்(55) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், ஆட்டோவிலிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.