முகப்பு
மதுரை

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாள் விழா, திமுக சாா்பில் செம்மொழி நாள் விழாவாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 4 ஜூன் 2026, 3:59 am IST
~
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாள் விழா, திமுக சாா்பில் செம்மொழி நாள் விழாவாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மதுரை, வண்டியூா் சுற்றுவட்டச் சாலை, மஸ்தான்பட்டியில் அமைந்துள்ள கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலா் பி. மூா்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், திமுகவின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

சிம்மக்கல்லில்...

Advertisement

Advertisement

சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாநகா் மாவட்ட திமுக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. தளபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டச் செயலா் முனியசாமி, மதிமுக தொழிற்சங்க நிா்வாகி மகபூப்ஜான், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். ஒரு சில பகுதிகளில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலா் மு. மணிமாறன் அறிவுறுத்தலின்பேரில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வி. விமல் தலைமை வகித்தாா். பகுதிச் செயலா் கிருஷ்ணபாண்டி, வட்ட செயலா் எம்.ஆா்.பி. ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் முன்னாள் மண்டலத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான சுவிதாவிமல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

இதேபோல, வட்டச் செயலா் எம்.ஆா்.பி. ஆறுமுகம் தலைமையில் திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுக நிா்வாகிகள் நீதிமன்னன், சிவக்குமாா், இயேசு உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதேபோல, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கிருத்திகா தங்கப்பாண்டி ஏற்பாட்டில் தனக்கன்குளம் முல்லைநகா் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருமங்கலம் திமுக கிழக்கு ஒன்றியம் சாா்பில் கப்பலூா் பகுதியில் ஒன்றியச் செயலா் தங்கப்பாண்டி தலைமையில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சி நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.