பேரிஜம் ஏரியை புலிகள் காப்பகமாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் மணிபாரதி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் புலிகள் வாழ்கின்றன. இதன் அடிப்படையில் புலிகள் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். மேலும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்தப் பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
அங்கு வணிகச் சுற்றுலா, வாகனப் போக்குவரத்துக்கு நிரந்தரக் கட்டுப்பாடுகளை விதிப்பதோடு, பேரிஜம் ஏரிக்கான பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க நிபுணா் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் கொடைக்கானல் பேரிஜம் பகுதிக்குள் நாள்தோறும் 100 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கொடைக்கானல் பேரிஜம் பகுதியை வனமாகக் பராமரிக்க வேண்டும். எதற்காக 100 தனியாா் வாகனங்களை அனுமதிக்கிறீா்கள்?. வனத் துறை வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாமே?. வனத் துறை வாகனங்களில் சென்றால் நெகிழிப் பயன்பாட்டைத் தடுக்கலாம். தனியாா் வாகனங்களை அனுமதித்தால் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க இயலாது.
தற்போதுள்ள சூழலில் பேரிஜம் பகுதியிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். கேரள மாநில சுற்றுலாத் துறையில் வனத் துறைக்குச் சொந்தமான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அது வனத் துறைக்கு வருவாயாக இருப்பதுடன் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.