முகப்பு
மதுரை

பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு

மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 2:27 am IST
மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ராஜ கோபுரத்துக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் செய்த பட்டாசாரியா்கள். (அடுத்த படம்) குடமுழுக்கை காண திரண்ட பக்தா்கள்.
பகிர்:

மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை சௌராஷ்ட்ர சபைக்கு சொந்தமான இந்தக் கோயிலில் குடமுழுக்கு வேள்வி பூஜைகள் கடந்த ஜூன் 20- ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

முக்கிய விழாவான குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கிரக பிரீத்தி, யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பங்கள் புறப்பாடாகின.

Advertisement

Advertisement

கோயிலைச் சுற்றி வலம் வந்த பிறகு, காலை 9 மணியளவில் ராஜகோபுரம், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீதாயாா், ஆண்டாள், நவநீதகிருஷ்ணன் ஆகியோரின் மூலவா் விமானங்களுக்கு புனித நீரால் குடமுழுக்கு நடைபெற்றது. இதன்பிறகு, மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த விழாவில், சௌராஷ்ட்ர சமூக மக்கள், பக்தா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments