முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் குழந்தை திருமணம் நிறுத்தம்

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள்  புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:24 am IST
பகிர்:

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள்  புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.
  ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ராமையா மகன் ரமேஷ்(25) என்பவருக்கும், புதுக்கோட்டை மாவட்ட்ம் அறந்தாங்கியில்  வியாழக்கிழமை திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
   இது தொடர்பாக சைல்டுலைன் அமைப்பினருக்கு கிடைத்த தகவலையடுத்து மனித வர்த்தக கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி, சமூக நலத்துறை இளநிலை உதவியாளர் பாண்டியன், சைல்டுலைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர்  ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முடிவில் சிறுமிக்கு திருமணம் செய்ய இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அச்சிறுமியை மீட்டு குழந்தைகள் நலக்குழுவினரிடமும் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments