நயினார்கோவில் அருகே விஷம் குடித்து மனைவி தற்கொலை: கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள கீழக்காவனூரில் திங்கள்கிழமை குடும்பத் தகராறில்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள கீழக்காவனூரில் திங்கள்கிழமை குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கணவர் மற்றும் அவரது சகோதரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நயினார்கோவில் அருகே உள்ள கீழக்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் மகள் சரண்யா (23). இவரும் அதே ஊரைச் சேர்ந்த சிவாஜி மகன் லெட்சுமணன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சரண்யா தனது மகனுடன் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சரண்யாவை அவரது கணவர் தகாத வார்த்தைகளால் திட்டினாராம். இதில் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் சரண்யாவின் தந்தை நாகராஜன் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் லெட்சுமணன், அவரது சகோதரர் பொக்காரு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.