கடலாடி , சாயல்குடி, பெருநாழியில் ஜனவரி 23 மின்தடை
கடலாடி, சாயல்குடி, பெருநாழி பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 23) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலாடி, சாயல்குடி, பெருநாழி பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 23) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கடலாடி, சாயல்குடி, பெருநாழி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.