திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் சி.ஜோசப் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி குறித்து....
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் சி.ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவின்போது, தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டு இளைஞர் ஒருவர் பலியானார், பலத்த காயமடைந்த மற்றொரு இளைஞர் சஷ்டிகன் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில், தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு, காயமடைந்தவருக்கு முதல்வர் சி.ஜோசப் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய் தனது இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (மே 31) காலை 10.30 மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின்போது தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜா மகன் ஹர்ஷவர்தன் (18) என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்துவிட்டார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதே பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் மகன் சஷ்டிகன்(19). என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
Tiruchengode Temple Car accident: CM Vijay announces financial assistance...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.