கத்தார் தீ விபத்தில் தமிழர்கள் பலி! நிதியுதவி, உதவி எண்கள் அறிவிப்பு!
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல், நிதியுதவி அறிவித்துள்ளது பற்றி...
கத்தார் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையமான ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட வெடிவிபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 13 பேர் பலியாகினர். 66 பேர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
விபத்தில் பலியான 13 பேரில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும் அதில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கத்தார் நாட்டில் ராஸ் லஃபான் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 21.06.2026 அன்று இரவு ஏற்பட்ட
தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சிதம்பராபுரம் யாக்கோபுரத்தைச் சேர்ந்த பபித் (வயது 26), த/பெ. தங்கராஜா, பணகுடி பகுதி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் (வயது 25), த/பெ. முத்துராஜா மற்றும் அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த சுவின் (வயது 24), த/பெ. மைக்கேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
க.தென்னரசு, இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்
எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் உதவி எண்கள்
இந்தியாவிற்குள் +91 1800 309 3793
வெளிநாட்டு தொடர்புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901.
CM condolence and Relief CMPRF on Qatar Fire Accident
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.