விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!
நாகப்பட்டினத்தில் விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவியை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது குறித்து...
நாகப்பட்டினத்தில் விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (நவ. 3) அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் மு. ஜனார்த்தனன் (வயது 29), த/பெ.முருகப்பா, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்புப் பணிக்கு ஓட்டுநர் பணியில் காவல் ஆய்வாளரின் பொலிரோ வாகனத்தை ஓட்டிச்சென்று, பணி முடித்து, 31.10.2026 அன்று அதிகாலை நாகப்பட்டினத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், திருகண்ணங்குடி ஆர்ச் அருகே, அவர் ஓட்டி வந்த வாகனத்தின்மீது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
Advertisement
Advertisement
இரண்டாம் நிலைக் காவலர் மு. ஜனார்த்தனனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மு. ஜனார்த்தனனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ. 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
On Tuesday (Nov. 3), Chief Minister Joseph Vijay announced financial assistance of Rs. 40 lakh for the family of a police officer who died in an accident in Nagapattinam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.