FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற நித்ய ஸ்ரீ-க்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய்

பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நித்ய ஸ்ரீ-க்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு குறித்து....

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நித்ய ஸ்ரீ சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வீராங்கனை நித்ய ஸ்ரீ-க்கு வாழ்த்துத் தெரிவித்து முதல்வர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் எஸ்எச்6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீ-க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

Advertisement

Advertisement

வீராங்கனை நித்ய ஶ்ரீ சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் சாதனை படைத்துள்ள அவரது வெற்றி, தடைகளைத் தகர்த்து சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தை அளிக்கிறது. வீராங்கனை நித்ய ஶ்ரீ, வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று, மேலும் பல புதிய உயரங்களைத் எட்ட வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

Rs.30 lakh incentive for Paralympic Badminton Bronze medalist NIthya Sri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments