மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!
மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

எஃப்ஐடிஇ உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ மற்றும் மூன்றாம் இடம் பிடித்த செஸ் வீராங்கனை நிவேதிதா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், வெனிசுலா நாட்டில் நடைபெற்று வரும் FIDE உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி, உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ, இப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை நிவேதிதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது அபாரமான அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் உலக அரங்கில் சாதனை படைத்துள்ள அவர்களது வெற்றி, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
செஸ் வீராங்கனைகள் சவிதா ஸ்ரீ, நிவேதிதா ஆகியோர் வருங்காலங்களிலும் சர்வதேச சாதனைகள் பல படைத்து, உலக செஸ் அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.