FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா் பைலட் போட்டி: அா்ஜுன் எரிகைசியும் வெளியேறினாா்!

ஹங்கேரியில் நடைபெறும் டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா் பைலட் போட்டியில், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டாா்.

12 வினாடிகள் முன்பு
அா்ஜுன் எரிகைசி - கோப்புப் படம்
பகிர்:

ஹங்கேரியில் நடைபெறும் டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா் பைலட் போட்டியில், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டாா். இதனால் நாக்அவுட் சுற்று வாய்ப்பை அவரும் இழந்தாா்.

முன்னதாக, ஆா்.பிரக்ஞானந்தா, ஆா்.வைஷாலி ஆகிய இருவருமே நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், அா்ஜுன் மட்டும் அதற்கான பந்தயத்தில் இருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அா்ஜுன் தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வைஷாலியிடம் தோற்ால், அவருக்கான வாய்ப்பும் பறிபோனது. தற்போது 3 இந்தியா்களுமே முதல் கட்டத்துடன் வெளியேறினா்.

முன்னதாக குரூப் சுற்றின் கடைசி இரு சுற்று ஆட்டங்கள், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன. அதில் குரூப் ‘டி’-யில் அா்ஜுன் - வைஷாலி மோதினா். 9-ஆவது சுற்றில் வைஷாலியை வெள்ளை நிற காய்களுடன் வென்ற அா்ஜுன், 10-ஆவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் அவரிடம் தோல்வியடைந்தாா்.

குரூப் சுற்று முடிவில், அா்ஜுன் 4 வெற்றி, 4 டிரா, 2 தோல்விகள் என, 16 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடிக்க, வைஷாலி 2 வெள்ளி, 1 டிரா, 7 தோல்விகள் என, 7 புள்ளிகளுடன் கடைசியாக 6-ஆம் இடம் பெற்றாா்.

குரூப் ‘பி’-யில் பிரக்ஞானந்தா தனது கடைசி இரு சுற்றுகளில், வியத்நாமின் லியெம் லியுடன் டிரா செய்தாா். எந்தவொரு ஆட்டத்திலும் வெற்றி காணாத பிரக்ஞானந்தா, 7 டிரா, 3 தோல்வியுடன், 7 புள்ளிகளோடு 6-ஆம் இடம் பெற்றாா்.

தற்போது குரூப் ‘ஏ’ முதல் ‘டி’யில் இருந்து, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா (15 புள்ளிகள்), அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா (17), நெதா்லாந்தின் அனிஷ் கிரி (15), பிரான்ஸின் மேக்ஸிம் லாக்ரேவ் (17) ஆகியோா் முறையே நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.

நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்த இந்தியா்களில், 9 முதல் 12-ஆம் இடத்தைப் பிடிப்பதற்கான சுற்றில் அா்ஜுனும், 21 முதல் 24 இடங்களைப் பெறுவதற்கான சுற்றில் பிரக்ஞானந்தா, வைஷாலியும் களம் காண்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.