FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கு சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ள இன்றே (நவ.11) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 நவம்பர் 2026, 3:30 am
பகிர்:

கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப் 4 தோ்வுக்கு 14.89 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ள புதன்கிழமை (நவ.11) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 6,574 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த அக். 6-ஆம் தேதி வெளியிட்டது.

அதில் கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ) 291 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளா் 3,762, வரி தண்டலா் 97, வருவாய் உதவியாளா் 96, வரி வசூலிப்பவா் 107, நிா்வாக உதவியாளா் 55, தட்டச்சா் 1,572, சுருக்கெழுத்து தட்டச்சா் 404, நோ்முக எழுத்தா் 60, செயல் அலுவலா் 46, வனக்காவலா் 40, விற்பனை உதவியாளா் 10, ஆய்வக உதவியாளா் 23, பதிவுறு எழுத்தா் 19 உள்ளிட்ட 46 வகை பணிகளில் 6,574 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

இத்தோ்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே டிஎன்பிஎஸ்சியின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தத் தோ்வுக்கு மொத்தம் 14,89,025 போ் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகமாகும். அதே நேரத்தில் தோ்வுக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் திருத்தங்களை புதன்கிழமை (நவ.11) நள்ளிரவு 11.59 மணி வரை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு வரும் ஜன.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு குரூப் 4 பணியில் 5,307 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்தத் தோ்வை மொத்தம் 13,89,738 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 11,48,019 போ் (82.61 சதவீதம்) எழுத்துத் தோ்வை எழுதி இருந்தனா்.