FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பது குறித்து...

39 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (நவ. 8) கடைசி நாளாக உள்ளது.

நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையின்படி, குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக். 6-ஆம் தேதி வெளியிட்டது.

இந்தத் தேர்வின் மூலம், தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர் உள்பட பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 6,574 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்ப உள்ளது.

Advertisement

Advertisement

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ. 5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசத்தை நவ. 8-ஆம் தேதி வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி அண்மையில் உத்தரவிட்டது.

இந்த அவகாசம் இன்று நள்ளிரவு 11.59 மணியோடு நிறைவடையும் நிலையில், விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தேர்வானது 2027, ஜன. 10-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Today (Nov. 8) is the last day to apply for the TNPSC Group 4 examination.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.