FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது! விண்ணப்பிக்கத் தயாரா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது குறித்து...

கோப்புப் படம்
பகிர்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (அக். 6) வெளியானது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு செய்து வருகிறது.

2026 ஆம் ஆண்​டுக்​கான டிஎன்​பிஎஸ்சி வரு​டாந்​திர தேர்வு அட்டவணையின்படி, 6 தேர்​வு​களில் 5 தேர்​வு​களுக்​கான அறிவிப்புகள் வெளி​யிடப்​பட்டு, அவற்றில் குரூப் 1, 2, 2ஏ ஆகிய 3 தேர்​வு​கள் நடத்தி முடிக்​கப்​பட்​டுள்​ளன.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், பில் கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,574 இடங்கள் இந்தத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (அக். 6) முதல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி இரவு 11.59 வரை கால அவகாசம் வழங்கப்ப்ட்டுள்ளது. மேலும், தேர்வானது 2027 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுக்கான காலியிடங்கள் அதிகமாக உள்ளதால் சுமார் 15 லட்சம் பேர் வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

The notification for the TNPSC Group 4 exam was released on Tuesday (Oct. 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments