டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியானது குறித்து...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு செவ்வாய்க்கிழமை (அக். 6) வெளியானது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், துணை ஆட்சியர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 46 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதினர்.
இதையடுத்து விடைக்குறிப்புக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில், உத்தேச விடைக் குறிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தேர்வெழுதியவர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விடைக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றை இணைய வழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் வரும் அக். 13 மாலை 05.45 வரை வழங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.
The tentative answer key for the TNPSC Group 1 preliminary examination was released on Tuesday (Oct. 6).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.