FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

டிஎன்பிஎஸ்சி - பிரதிப் படம்
பகிர்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை (நவ. 4) நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது.

இத்தேர்வு மூலமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 46 பதவிகளில் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

Advertisement

Advertisement

டிஎன்பிஎஸ்சியின் நடப்பு ஆண்டு அட்டவணைப்படி, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அக். 6 முதல் நவ. 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவ.8 ஆம் தேதி இரவு 11.59 வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இன்று (நவ. 4) உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்தத் தேர்வானது, அடுத்த ஆண்டு ஜன.10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The deadline for applying for the TNPSC Group 4 examination has been extended to Wednesday (Nov. 4).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.