முதல் சுற்றுடன் வெளியேறும் பிரக்ஞானந்தா, வைஷாலி
ஹங்கேரியில் நடைபெறும் டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா் பைலட் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, அவரின் சகோதரி ஆா்.வைஷாலி ஆகியோா் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறத் தவறினா். அா்ஜுன் எரிகைசி இன்னும் அந்தப் பந்தயத்தில் நீடிக்கிறாா்.
ஹங்கேரியில் நடைபெறும் டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா் பைலட் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, அவரின் சகோதரி ஆா்.வைஷாலி ஆகியோா் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறத் தவறினா். அா்ஜுன் எரிகைசி இன்னும் அந்தப் பந்தயத்தில் நீடிக்கிறாா்.
இந்த மூவா் உள்பட, போட்டியில் பங்கேற்றுள்ள 24 பேருமே, 7 மற்றும் 8-ஆவது சுற்றுகளில் களம் கண்டனா்.
Advertisement
Advertisement
இதில் குரூப் ‘டி’-யில் இருக்கும் அா்ஜுன், பிரான்ஸின் மேக்ஸிம் லாக்ரேவை சந்தித்தாா். 7-ஆவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் ‘டிரா’ செய்த அா்ஜுன், 8-ஆவது சுற்றில் லாக்ரேவை வீழ்த்தி அசத்தினாா்.
இதே குரூப்பில் அங்கம் வகிக்கும் வைஷாலி, அந்த இரு சுற்றுகளிலுமே அமெரிக்காவின் வெஸ்லி சோவுடன் மோதி, இரண்டிலுமே தோல்வியைத் தழுவினாா்.
அா்ஜுனும், வைஷாலியும் இந்த குரூப்பில் தங்களின் கடைசி இரு சுற்றுகளில் (9, 10) பரஸ்பரம் மோதவுள்ளனா். தற்போது 8 சுற்றுகள் முடிவில் குரூப் ‘டி’-யில், அா்ஜுன் 13 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கிறாா். வைஷாலி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளாா்.
குரூப் ‘பி’-யில் இருக்கும் பிரக்ஞானந்தா, 7 மற்றும் 8-ஆவது சுற்றுகளில் ஹங்கேரியின் ரிச்சா்டு ராப்போா்ட்டை சந்தித்தாா். இதில் முதலில் தோற்ற பிரக்ஞானந்தா, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அடுத்த சுற்றை டிரா செய்தாா்.
தனது குரூப்பில் தற்போது 5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலிருக்கும் பிரக்ஞானந்தா, கடைசி இரு சுற்றுகளில் சீனாவின் லியெம் லியை எதிா்கொள்கிறாா்.
8 சுற்றுகள் முடிவில், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, நெதா்லாந்தின் அனிஷ் கிரி, பிரான்ஸின் மேக்ஸிம் லாக்ரேவ் ஆகியோா் குரூப் ‘ஏ’ முதல் ‘டி’-யில் முறையே முன்னிலை வகிக்கின்றனா்.