FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெண் தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம்! - முதல்வர்

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறினைத் தடுக்க முயன்றபோது பலியான தலைமைக் காவலர் கண்ணகியின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது குறித்து...

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறினைத் தடுக்க முயன்றபோது பலியான தலைமைக் காவலர் கண்ணகியின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணத்தொகையை முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (செப். 29) அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிக்வித்திருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவந்த எம். கண்ணகி (வயது 34) என்பவர் நேற்று (செப். 28) பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியில் இருக்கும்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின்பொழுது அவர்களுக்கு உண்டான காயத்திற்கு சிகிச்சைக்காக அம்மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Advertisement

Advertisement

அப்போது, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதனைத் தடுக்கும் முயற்சியில் தப்பி ஓடிய நபரைப் பிடிக்க துரத்திச் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் தவறிவிழுந்து மயங்கிய நிலையில், சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

தலைமைக் காவலர் எம். கண்ணகியின் உயிரிழப்பு, தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

எம். கண்ணகியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

summary

Head Constable Kannagi, who lost her life while attempting to intervene in a dispute between two parties, will have her family receive a relief amount of ₹30 lakh, as announced by Chief Minister Vijay on Tuesday (Sept. 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments