முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆர்ப்பாட்டம்

தொண்டி பேரூராட்சியில் வரி உயர்வைக் கண்டித்து,  மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜனவரி 2019, 8:08 am IST
பகிர்:

தொண்டி பேரூராட்சியில் வரி உயர்வைக் கண்டித்து,  மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     தொண்டி பேரூராட்சி பாவோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் சிக்கந்தர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முகமது இஸ்மாயில், கலாசாரப் பேரவை மாவட்டச் செயலர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசிய மாநில துணை பொதுச் செயலர் ஜெய்னுலாபுதீன், தொண்டி பேரூராட்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.    முன்னதாக, அக்பர் சுல்தான் வரவேற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.